1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: புதன், 6 ஜனவரி 2016 (20:53 IST)

பங்குச் சந்தையில் 3வது நாளாக சரிவு

இன்றைய பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன.


 

 
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.01 புள்ளிகள் சரிந்து 25,406.33 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 7,741-ஆகவும் முடிந்தன.
 
இன்றைய சீன பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட தொடர் சரிவு காரணமாகவும் உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன. இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன என்று பங்குச்சந்தை நிபுணர் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரிவுடைந்துள்ளது. லண்டன் எண்ணெய் சந்தையில் brent வகை கச்சா எண்ணெய் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தது. இதனால், பிப்ரவரி மாத வினியோகத்துக்கான கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.83 டாலர் என்ற அளவை தற்போது தொட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்ததே விலை சரிவுக்கு காரணமாகும்.