அதிவேக வைபை வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!!
பிராட்பேண்ட் இண்டர்நெட் வைபை சேவையின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ...
வைபை ரவுட்டர்:
வைபை இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த ரவுட்டரை வைபை பயன்படுத்தப்படும் கட்டிடத்தின் நடுவே வைக்க வேண்டும்.
இதனால் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ரவுட்டரை உயரமான இடத்தில் வைத்தாலும், வேகம் அதிகரிக்கும்.
வைபை ரிப்பீட்டர்:
சில ரவுட்டர்களால் வீடு முழுக்க சிக்னல்களை வழங்க முடியாமல் போகலாம். இதனால் இண்டர்நெட் வேகம் குறையும்.
இதற்கு ரிப்பீட்டரை பயன்படுத்தலாம். ரிப்பீட்டர் பயன்படுத்தும் போது வைபை சிக்னல் முன்பை விட அதிக இடங்களுக்கு பரவும்.
இந்தியாவில் வைபை ரிப்பீட்டர்களின் விலை ரூ.1000 முதல் துவங்குகிறது.
வைபை பாஸ்வேர்டு:
வைபை திருடப்படாமல் இருக்க பாஸ்வேர்டினை அடிக்கடி மாற்றுவது நல்லது. வைபை வேகம் அதனை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.