1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 28 ஜூலை 2016 (16:56 IST)

செல்ஃபி-க்காக சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.எ அல்ட்ரா

செல்ஃபி-க்காக சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.எ அல்ட்ரா

சோனி நிறுவனம் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்.எ அல்ட்ரா என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.


 


செல்ஃபி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த சோனி எக்ஸ்பீரியா  எக்ஸ்.எ அல்ட்ரா ஸ்மார்ட்போன் டூயல் சிம்(Dual SIM) ஆதரவு கொண்டு, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. மேலும் மொபைல் பிராவியா எஞ்சின் 2(Mobile Bravia Engine 2) உடன், 6.0 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே(6.0 Inch full HD Display), 3ஜிபி ராம்(3 GB RAM), 64பிட் அக்டா கோர் மீடியாடெக் ப்ராசசர்(64 Bit Octacore Mediatech Processor) மூலம் இயக்கப்படுகிறது.  

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 200ஜிபி விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சோனி எக்ஸ்பீரியா XA அல்ட்ரா ஸ்மார்ட்போனில் Exmor ஆர் சென்சார்(Exmor R Sensor), ஹைபிரிட் ஆட்டோஃபோகஸ்(Hybrid Auto Focus), HDR ஃபோட்டோ மோட்(HDR Photo Mote), ஆட்டோ சீன் ரெகக்னைசேஷன்(Auto Screen Regognition) மற்றும் எல்இடி ஃபிளாஷ்(LED Flash) கொண்ட 21.5 மெகாபிக்சல் பின்புற கேமரா(21.5 Megapixel rear camera) மற்றும் 88 டிகிரி வரை வைட் ஆங்கிள் லென்ஸ்(88 degree wide angle lens) கொண்ட 16 மெகாபிக்சல் முன் கேமரா(16 Megapixel front camera), 2700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

இது ஒயிட், கிராபைட் பிளாக், மற்றும் லைம் கோல்ட் வண்ண வகைகளில், ரூ.29,990 விலையில் கிடைக்கிறது. சோனி மையம் கடைகள் மற்றும் பிற மின்னணு விற்பனையாளர்கள் கடைகள் வழியாக கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்