தடாலடியாக கட்டணங்களை உயர்த்திய எஸ்பிஐ: ஜிஎஸ்டி-யின் தாக்கமா??


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (20:27 IST)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதள வங்கி சேவை, ஏடிஎம் சேவை உள்ளிட்ட சேவைகளின் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

 
 
ஜூலை முதல் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததையடுத்து கட்டணங்களுக்கான சேவை வரி 15 % இருந்து 18 %  உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி ஜிஎஸ்டியின் காரணமாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
 
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் அளிக்கப்பட்டுள்ள இலவச வரம்பைத் தாண்டி  பரிவர்த்தனை செய்தால் ரூ.20 மற்றும் வரியை செலுத்த வேண்டும்.
 
இணையதள வங்கி சேவை; IMPS:
 
ரூ.1 லட்சம் பணப் பரிமாற்றம் செய்யும் போது ரூ.5 மற்றும் வரி, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 15 ரூபாய் மற்றும் வரி, ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது ரூ.25 மற்றும் வரி செலுத்த வேண்டும்.
 
சேதமைடைந்த ரூபாய் நோட்டு:
 
சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் ஒவ்வொரு ரூபாய் நோட்டிற்கும் ரூ.2 மற்றும் வரி கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
செக் புக்:
 
# 10 தாள் உள்ள செக் புக்: ரூ.30 மற்றும் ஜிஎஸ்டி, 
 
# 25 தாள் உள்ள செக் புக்: ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி, 
 
# 50 தாள் உள்ள செக் புக்: ரூ.150 மற்றும் ஜிஎஸ்டி.
 
ஏடிஎம் கார்ட்:
 
புதிய ஏடிஎம் கார்டுகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். ரூபே கிளாசிக் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :