1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (17:55 IST)

Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி

Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடைவிதித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.


 

 
எஸ்.பி.ஐ வங்கி Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய தடைவிதித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ டுவிட்டரில், Paytm மூலம் பரிவர்த்தனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக State Bank Buddy என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது.
 
இதற்கு Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, எஸ்.பி.ஐ அவர்களது ஆப்பை பிரபலப்படுத்த இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் எஸ்.பி.ஐ வங்கி கிளை ஒன்றில் Paytm மற்றும் State Bank Buddy ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு வைக்கப்படுள்ள விளம்பரத்தின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
 
ரூபாய் நோட்டுகள் முடக்கத்திற்கு பின், பொதுமக்கள் அதிக அளவில் Paytm ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த செயல்பாடு வாடிக்கையாளர்கள் மற்றும் Paytmக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் சில வாடிக்கையாளர்கள், Paytmக்கு இணையாக உங்கள் ஆப்பை தாயார் செய்துவிட்டு பின் இந்த நடவடிக்கையை எடுங்கள் என தெரிவித்துள்ளனர்.