திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:13 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா...?

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. 
 
கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வெர்ஷன்  வெளியான போது ரூ.64,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.7000 விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.57,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
அதேபோல், கேலக்ஸி எஸ்9 பிளஸ் 128 ஜிபி வெர்ஷன் மீதும் ரூ.7000 குறைக்கப்பட்டு ரூ.68,900-ல் இருந்து ரூ.61,900-க்கும்; 256 ஜிபி வெர்ஷன் ரூ.72,900-ல் இருந்து ரூ.65,900க்கு விற்கப்படுகிறது. 
 
இந்த விலை குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 630, மாலி G72M18GPU, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், வாட்டர் ரெசிஸ்டண்ட், டஸ்ட் ரெசிஸ்டண்ட் 
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
# 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
# 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்