வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (11:15 IST)

பெட்ரோல் பங்கிலும் ரூ.2,000 வரை பெறலாம்!!

இன்று முதல் பெட்ரோல் ’பங்க்’களிலும் ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. 
 
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதி வருகின்றனர். 
 
இந்நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் ’பங்க்’களில் பி.ஓ.எஸ் (POS Machines) மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்மூலம் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை தேய்த்து, ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி முதலில் ஸ்டேட் வங்கியின் POS கருவிகள் மூலம், 2,500 பெட்ரோல் ’பங்க்’களில் செயல்படுத்தப்படுகிறது. 
 
அடுத்த மூன்று நாட்களில் எச்டிஎஃப்சி வங்கி, சிடி வங்கி, ஐசிஐசிஐ  வங்கிகளின் POS Machines மூலம் 20,000 ’பங்க்’களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.