வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2016 (14:47 IST)

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்!!

28 பொதுத் துறை வங்கிகள் 2015-16-ம் நிதி ஆண்டில் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.17,993 கோடி என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 
 
இவற்றில் 14 வங்கிகள் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளன. மற்றவை ஓரளவு லாபம் ஈட்டியுள்ளன. பாங்க் ஆப் இந்தியா எதிர்கொண்ட நஷ்டம் ரூ.6,089 கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.5,396 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.3,974 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.3,665 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ரூ.2,897 கோடி, யூகோ வங்கி ரூ.2,799 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ.1,643 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,418 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
 
கடந்த நிதி ஆண்டில் லாபமீட்டிய வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ ரூ.9,951 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ரூ.1,065 கோடி, ஸ்டேட பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ரூ.851 கோடி, ஆந்திர வங்கி ரூ.540 கோடி லாபம் ஈட்டி உள்ளது.