1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (15:22 IST)

ஏர்டெக்கான் ரிட்டர்ன்ஸ்: ரூ.1-க்கு விமான பயணம்!!

விமான போக்குவரத்து சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் விமான டிக்கெட் கட்டணங்கலுக்கு சலுகை அளிப்பது அதன் தேவை அதிகரித்துள்ளது. இந்த வகையில், ஏர்டெக்கான் நிறுவனம் ஒரு ரூபாய் தனது விமான சேவையை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய மக்கள் மத்தியில் விமான பயணத்தை எளிமையாக்க முதல் முறையாக மலிவான கட்டணத்தில் சேவையை துவங்கியது ஏர் டெக்கான் நிறுவனம். ஜி.ஆர் கோபிநாத் 2003 ஆம் ஆண்டு ஏர்டெக்கான் விமான சேவையை துவங்கினார். 
 
இந்நிறுவனத்தின் மலிவான சேவைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால், 2008 ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் உடன் கூட்டணி வைத்தார். ஆனால், கிங்பிஷர் நிறுவனத்தில் வர்த்தகம் இல்லாத காரணத்தால், ஏர்டெக்கான் நிறுவனமும் இழப்பை சந்தித்தது.
 
இந்நிலையில் ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் களத்ட்ய்ஹில் இறங்கியுள்ளது. வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தனது சேவையை மீண்டும் துவங்க திட்டமிட்டு வருகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து சேவையைத் துவங்க உள்ளது. இதனுடன் அருகில் இருக்கும் சிறு நகரங்களையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஏர் டெக்கான் நிறுவனத்தின் ஆரம்ப சலுகையாக சிலருக்கு 1 ரூபாய் விமான பயணத்தையும் வழங்க வாய்ப்பு உள்ளது. மும்பை முதல் நாசிக் வரையிலான 40 நிமிட பயணத்திற்கு 1,400 ரூபாய் வரையில் டிக்கெட் விலை இருக்கும் என தெரிகிறது.