100 ஜிபி டேட்டா + ரூ.2,200 பணமும் வேண்டுமா..? இத பண்ணுங்க...

Last Updated: சனி, 23 மார்ச் 2019 (15:29 IST)
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி கோ ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.2,220 கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். இந்த ஆஃபர் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு..
 
சியோமி நிறுவனத்தின் ரெட்மி கோ என்ற ஸ்மார்ட்போன் ரூ.4,449-க்கு  பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. நீலம் மற்றும் கருப்பு ஆகிய இரு நிறங்களில் ரெட்மி கோ கிடைக்கிறது. 
 
சலுகைகள்: 
ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ரூ.50 மதிப்புள்ள ஒரு கூப்பனாக அதாவது மொத்தம், வீதம் 44 கூப்பன் வழங்கப்படுகிறது. இதனை மை ஜியோ ஆப் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஜியோவின் 198 மற்றும் 299 ரூபாய் ரீசார்ஜ்க்கு பொருந்தும். 
இதே போல், 100 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஒரு முறை ரிசார்ஜ் செய்யும் போது 10 ஜிபி டேட்டா வீதம் பத்து முறை ரீசார்ஜ் செய்யும் போது 100 ஜிபி டேட்டா கிடைக்கும்.
 
ரெட்மி கோ சிறப்பம்சங்கள்: 
# 6 இன்ச் டிஸ்ப்ளே , Qualcomm® Snapdragon™ 425 பிராசசர் 
# டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு ஒரியோ 
# 1 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# 5 மெகா பிக்சல் முன்புற கேமரா, 8 மெகா பிக்சல் பின்புற கேமரா, எல்இடி ஃபிளாஷ் 
# 3,000 mAh பேட்டரி திறன்


இதில் மேலும் படிக்கவும் :