வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (16:07 IST)

எல்பிஜி விற்பனையில் களமிறங்கும் ரிலையன்ஸ்!!!

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இப்போது எல்பிஜி விற்பனையிலும் களமிறங்கி இருக்கிறது. 

 
முதல் கட்டமாக 4 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்ய  ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் இந்த விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. 
 
தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் இந்த சந்தையில் கணிசமாக பங்கினை கைப்பற்ற நுழைந்திருக்கின்றன. 
 
தற்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே சில்லரை விற்பனையில் உள்ளன. 
 
5 கிலோ, 14.2 கிலோ மற்றும் 19 கிலோ சிலிண்டர்களில் எல்பிஜி விற்பனை செய்யப்படுகிறது. வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் (14.2 கிலோ) மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றன. வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ சிலிண்டர்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.
 
ரிலையன்ஸ் எவ்வளவு விலைக்கு விற்கிறது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் 1.2 லட்சம் டன் அளவுக்கு எல்பிஜி-யை விற்க கடந்த வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.