1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மே 2017 (10:55 IST)

நான்கே நிமிடங்களில் இரண்டரை லட்சம்: ரெட்மி விற்பனையில் அசத்தல்!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. அதோடு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.


 
 
ரெட்மி 4 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.6,999 என்ற விலையில் துவங்கும் ரெட்மி 4 முதல் பிளாஷ் விற்பனை நடைபெற்றது. 
 
அதன்படி விற்பனை துவங்கியதும் 8 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. 
 
இதோடு சேர்த்து விற்பனை துவங்கிய முதல் நான்கு நிமிடங்களில் 2,50,000 ரெட்மி 4A மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 
 
இதனால், விற்பனையில் முன்னிலை வகித்த சாம்சங் கேலக்ஸி J2 ஸ்மார்ட்போனை பின்னுக்கு தள்ளி சியோமி ரெட்மி நோட் 4 முதலிடம் பிடித்துள்ளது.