வீடு வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு


Abimukatheesh| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (17:19 IST)
ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

 
மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெபோ வட்டி விதிகத்தை 0.25 சதவிதம் குறைப்பதாக தெரிவித்துள்ளது. 
 
இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிய வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அசற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வழங்கும் வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சற்று வெறுப்படைந்தனர். இந்நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என்ற் செய்தி சற்று மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :