முடியும் ஆனால் முடியாது; ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்: நிதித்துறை செயலர்

GST
Last Updated: ஞாயிறு, 8 ஜூலை 2018 (18:03 IST)
பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று நிதித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
 
ஆனால் மத்திய அரசு தற்போது வரை இதற்கு செவி சாய்க்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையின் விலை உயர்வுக்கு மட்டும் காரணம் கூறி வருகின்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்கு வெளியே இருக்கிறது என்பதை அரசு உணர்ந்திருக்கிறது. சரியான சமயத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தன்னுடைய முடிவினை எடுக்கும். ஆனால் இவற்றை எளிதாக ஜிஎஸ்டிக்குள் இணைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :