1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2015 (08:28 IST)

பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்தது; டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசுகள் குறைக்கப்பட்டது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.
 
அதன்படி நேற்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள் குறைந்தது.
 
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரித்து ரூ.66.93 ஆனது. கொல்கத்தாவில் 66 காசுகள் அதிகரித்து ரூ.74.42 ஆகவும், மும்பையில் 66 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.74.78 ஆகவும், சென்னையில் 67 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.12 ஆகவும் அதிகரித்தது.
 
இதன்மூலம் சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.70–ஐ தாண்டியுள்ளது. டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.1.45 குறைந்து ரூ.54.29 ஆனது.
 
டெல்லியில் டீசல் ரூ.1.35 குறைந்து லிட்டர் ரூ.50.93 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1.40 குறைந்து ரூ.55.45 ஆகவும், மும்பையில் ரூ.1.49 குறைந்து ரூ.58.37 ஆகவும் ஆனது. இந்த விலை மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலையை பொருத்தவரை கடந்த மாதத்தில் இருந்து இப்போது 3 ஆவது முறையாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. டீசல் விலை கடந்த மாதம் 2 முறை அதிகரித்து, இப்போது சிறிது குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.