Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாறுமாறாக எகிறிய பெட்ரோல் விலை; அதிர்ச்சியில் வானக ஓட்டிகள்

Petrol
Last Updated: திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:15 IST)
பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 
மத்திய அரசின் ஒப்புதல் படி தினசரி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அன்றைய சந்தை நிலவரப்படி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
 
இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதே இந்தியாவில் விலை குறைக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகப்பட்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் இன்று ரூ.76.59க்கும், டீசல் ரூ.68.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
தற்போது பெட்ரோல் விலை அதிகவிலை பட்டியிலில் இன்றைய விலை இரண்டாம் இடம்பிடித்துள்ளது. இதுவரை அதிகப்பட்சமாக 2014ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.76.93க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :