1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (10:04 IST)

பேடிஎம்-க்கு கடும் எதிர்ப்பு: விதிமுறைகளில் மாற்றம்!!

மார்ச் 8 தேதி முதல் கிரெடிட் கார்டு மூலமாகப் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றும் போது 2% கட்டணம் பெறப்படும் என பேடிஎம் அறிவித்தது.


 
 
இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 2 சதவீத கட்டண அறிவிப்புத் திட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது பேடிஎம் நிறுவனம்.
 
மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்த பிறகு கட்டணம் ஏதும் இல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் பரிவர்த்தனை முறையை நவம்பர் மாதம் பேடிஎம் அறிமுகப்படுத்தியது. இதனால் பலர் பேடிஎம் செயலியில் இணைந்து பயன்பெற்று வந்தனர்.
 
கட்டண விதிப்புத் திரும்பப் பெற்றுள்ளதை அடுத்துப் பேடிஎம் நிறுவனம் புதிய இந்தச் சிக்கலைத் தவிர்க்க புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றது. 
 
கிரெடிட் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க புதிய அம்சங்களைக் கொண்டு வருவோம் என்று பேடிஎம் குறிப்பிட்டுள்ளது.