Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 2% வரி: பேடிஎம் அதிரடி


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (18:31 IST)
பேடிஎம்-யில் கிரெடிட் கார்ட்டு மூலம் தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தினால் 2% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
பேடிஎம் வாலட் என்ற வசதி மூலம் வாடிக்காயாளர்கள் வங்கி கணக்கு, டெபிட், கிரெடிட் கார்ட்டு ஆகியவை மூலம் தொகையை பேடிஎம் வாலட்டில் சேர்த்துக்கொள்ளலாம். அதைக்கொண்டு பேடிஎம்-யில் ரிசார்ஜ், ஷாப்பிங் ஆகியவை செய்துக்கொள்ளலாம். இல்லையென்றால் வாலட்டில் உள்ள தொகையை நமது கணக்கில் திரும்ப செலுத்திக்கொள்ளலாம் என்ற வசதி உள்ளது.
 
இந்த வசதியை பெரும்பாலானோர் வாலட்டில் தொகையை சேர்த்துவிட்டு, அதை மீண்டும் தங்கள் கணக்கில் செலுத்தி விடுகின்றனர். இதனால் பேடிஎம் நிறுவனத்தின் லாபம் தடைப்படுகிறது. குறிப்பாக கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் இதை செய்து வருகின்றனர்.
 
இதனால் பேடிஎம் நிறுவனம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி மார்ச் 8ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு மூலம் வாலட்டில் தொகையை சேர்த்து பின்னர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தினால், 2% வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
 
ஏர்டெல் நிறுவனம் தனது பேமெண்ட் வங்கி மூலம் பணத்தை வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தால் அதற்காக வரி தொகையை ஏற்கனவே அறிவித்து விட்டது. அதைத்தொடர்ந்து தற்போது பேடிஎம் நிறுவனம் வாலட்டில் இருந்து வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தால் வரி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :