வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (14:06 IST)

ஒரு லட்சம் ஏடிஎம்-ஐ குறிவைக்கும் பேடிஎம்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதன் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தணக்களை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்தது. 
 
இந்த சந்தப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டது பேடிஎம் நிறுவனம். ரொக்க பரிவர்த்தனை குறைந்ததால், அடுத்த 15 நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் பரிவர்த்தனை 70 லட்சமாக உயர்ந்தது. 
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் 15 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. மோடியின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னர் பேடிஎம் வாடிக்கையாலர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 
 
அதன்பின்னர் நிதி தொழில்நுட்பத்துறையில் பேடிஎம் நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்தது. இதன் பின்னர் பேடிஎம் பேமென்ட் வங்கியை துவங்கியது. இந்த பேமென்ட் வங்கியை தொடர்ந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கு முடிவுசெய்துள்ளது.  
 
பேடிஎம் நிறுவனம் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.