Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பானாசோனிக் எலுகா ஆர்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பானாசோனிக் எலுகா ஆர்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Sugapriya| Last Modified வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:19 IST)
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.


டூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் எலுகா ஆர்க் 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. 5.0 இன்ச் எச்டி ஆன்-செல் டச் டிஸ்ப்ளே, 3ஜிபி ராம், 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கீறல்களில் இருந்து பாதுகாப்பதற்காக திரை பாதுகாப்பு கொண்டுள்ளது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது, எல்இடி ஃபிளாஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா, 2450mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

ரூ.12,290 என நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :