திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (11:07 IST)

கூரைய பிச்சிகிட்டு கொட்டியும் என்ன லாபம்? பிஎஸ்என்எல்-க்கு சோதனை மேல் சோதனை!

கிட்டத்தட்ட 92 ஆயிரம் ஊழியர்கள் பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு பண பயன்கள் கொண்ட விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.  
 
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:
1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும். 
இந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால், தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உழியர்கள் ஓய்வு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். 
 
ஆம், கிட்டத்தட்ட 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிப்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கும் என்றும் பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் மேலும் பல ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிக்க கூடும் என தெரிகிறது. ஆனால், இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒரு சிக்கலும் உள்ளது. எதிர்ப்பார்த்ததைவிட அதிக ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பதால் அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி வரும் என தெரிகிறது.