1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:01 IST)

பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் கணக்குடன் இணைக்க என்ன செய்ய வேண்டும்??

பிஎப் கணக்கை எப்படி புதிய நிறுவனத்துடன் இணைப்பது? மற்றும் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு எப்படி உரிமைகோருவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

 
மூன்று வருடத்திற்கு மேல் பிஎப் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயல்படா கணக்காக மாறிவிடும். அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டி ஏதும் கிடைக்காது. செயல்படாத கணக்கில் பணம்  வைத்திருந்தால் லாபம் ஏதும் ஈட்ட இயலாது.
 
வேறு நிறுவனத்தில் மாறி வேலைக்குச் சேர்ந்தவுடன் பழைய நிறுவனத்தின் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) வைத்திருந்தால், அந்த எண்ணை புதிய நிறுவனத்தில் அளித்து பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 
ஆன்லைன், ஆப்லைன் முறைகள்: 
 
புதிய நிறுவனத்தில் வேளைக்குச் சேரும் போது ஆன்லைன், ஆப்லைன் என இருவழியாகவும் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். 
 
ஆன்லைன் மூலம் மாற்ற பழைய நிறுவனத்தின் பிஎப் அலுவலகத்தில் டிஜிட்டல் கையொப்பத்தைச் சமர்ப்பித்து இருத்தல் வேண்டும். 
 
ஆப்லைன் முறையில் மாற்றும் போது புதிய நிறுவனம் பழைய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான பணிகளைச் செய்யும்.
 
ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மாதங்கள் நீங்கள் பணியை தொடராமல் இருந்தால் நீங்கள் படிவம் 19-ஐ பயன்படுத்தி பணத்திற்கான உரிமைகோரலாம். இதற்கான படிவத்திதை ஈபிஎப்ஓ(EPFO) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.
 
ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து பணி புரியாமல் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்து பணத்திற்கான உரிமை கோரும் போது 10 சதவீதம் வரை டிடிஎஸ் (TDS) கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதுவே ஐந்து வருடத்திற்கு மேற்பட்டு நீங்கல் பணி புரிந்து இருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.