100 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக்? என்கிரிப்ஷனில் புது பிழை
வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்ட என்கிரிப்ஷனில் புதிதாக பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
செக் பாயிண்ட் என்னும் கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை ஊடுருவி தகவல்களை எளிதாக இயக்க முடியும் என தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளின் பாதுகாப்பிற்காக என்கிரிப்ஷன் முறையில் பாதுகாப்பு தாயார் செய்யப்பட்டது. ஆனால் இந்த என்கிரிப்ஷனில் தற்போது பிழை இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹேக்கர்கள் எளிதாக வாட்ஸ்அப் கணக்குகளில் ஊடுருவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஒரே புகைப்படத்தை அனுப்பி அக்கவுண்டினை முழுமையாக இயக்க முடியும். இதில் வாடிக்கையாளர் மற்றவர்களுக்கு அனுப்பிய குருந்தகவல், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இயக்க முடியும்.
மேலும் தற்போது இதனால் 100 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் ஆபத்தில் உள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.