1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2016 (15:08 IST)

2,850 ஊழியர்களுக்கு வேலை இல்லை: மைக்ரோசாப்ட் அதிரடி

2,850 ஊழியர்களுக்கு வேலை இல்லை: மைக்ரோசாப்ட் அதிரடி

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் இருந்து 2,850 பணியாளர்களை வேலையை விட்டு துறத்தும் முடிவுக்கு வந்துள்ளது.


 


கடந்த மே மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,850 பணியாளர்களை நீக்கப் போவதாக அறிவித்திருந்து, தற்போது அது 2,850 நபர்களாக அதிகரித்துள்ளது.

2016 நிதி ஆண்டில் ஃபோன் விற்பனை குறைந்துள்ளது வரும் 2017 ஆம் நிதி ஆண்டிலும் இதே சூழல் நிலவ வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுவதால் செலவுகளை குறைக்க மைக்ரோசாப்ட் முயல்வதாகக் தெரியவந்துள்ளது.

1998 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நோக்கியா உலகின் சிறந்த மொபைல் நிறுவனமாக இருந்ததும், பின்னர் மைச்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மாறியதன் காரணமாக பெரும் தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடதக்கது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்