ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (19:01 IST)

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எமனான சர்ஃப் எக்ஸல்...

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எமனான சர்ஃப் எக்ஸல்...
சர்ஃப் எக்ஸல் விளம்பரத்தால் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ரேட்டிங்கை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
துணி துவைக்கும் பவுடர் பிராண்டான சர்ஃப் எக்ஸல் சமீபத்தில் ஹோலியை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை மையப்படுத்தி அந்த விளம்பரப் படம் இருவாக்கப்பட்டிருந்தது. 
 
இந்த விளம்பரத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், கடும் விமர்சங்களும் எதிர்ப்புகளும் எழுந்தது. இந்து மதப் பண்டிகையைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, டிவிட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. 
 
இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் பலரும் சர்ஃப் எக்ஸல் ஆப்பை தேடினர். ஆனால், சர்ஃப் எக்ஸலுக்கு பதிலாக மைக்ரோசாஃப்ட் எக்ஸலை டவுன்ரேட் செய்து அதன் ரேட்டிங் குறைந்துள்ளது.