1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (16:05 IST)

29 ரூபாயில் 1 ஜிபி ஏர்டெல் டேட்டா பெற வேண்டுமா??

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது பயனர்க்ளுக்காக வெறும் 29 ரூபாய்க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா திட்டத்தை வழங்குகிறது. 

 
ரூ.29-க்கு ஏர்டெல் எண் ரீசார்ஜ் செய்யப்பட்டால் 75 எம்பி அளவிலான 3ஜி டேட்டாவை 28 நாட்கள் அனுபவிக்க முடியும் என்றபடியாக இருந்தது. இப்போது அதே 29 ரூபாய் தரவு பேக் பயன்படுத்தி 28 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை பெற முடியும்.
 
29 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா பெற சில வழிமுறைகள்:
 
1. முதலில் ரூ.96 மதிப்புள்ள ஒரு ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும். அதை காமர்ஸ் அல்லது சாதாரண சில்லறை விற்பனை நிலைய கடைகளில் இருந்தும் செய்யலாம்.
 
2. ரீசார்ஜிற்கு பின்னர், ஏர்டெல் எண்ணில் இருந்து *121*111 # என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.
 
3. இப்போது ஸ்க்ரீனில் ஒரு பாப்-அப் தோன்றும். அங்கு ரூ.29/-க்கான பேக்கை தேர்வு செய்யவும். உடன் மொபைல் பேலன்ஸ் ஆனது குறைந்தபட்சம் 29 ரூபாய் இருக்க வேண்டும் என்பதும், தேர்வு செய்த பின்பு அது பேலன்ஸில் இருந்து கழிக்கப்பட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
4. பின்னர் முதலில் 75எம்பி அளவிலான 3ஜி டேட்டா கிடைக்கப் பெற்றுள்ளது என்ற ஆப்ரேட்டர் கன்பர்மேஷன் மெசேஜ் வரும். 
 
5. பின்னர், டேட்டா பேலன்ஸில் 30 நாட்கள் செல்லுபடியாகும் 1.1ஜிபி  டேட்டா கிடைக்கப்பெற்றிருக்கும்.
 
குறிப்பு: ரூ.96 ரீசார்ஜ் நிகழ்த்திய பின்பு கட்டாயமான ரூ.29-க்கு ரீசார்ஜ் மேற்கொள்ள வேண்டும்.