1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (10:55 IST)

ஜியோ சிம் கிடைக்கவில்லையா? பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவையை பெறலாம்...

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டுவிட்டது. ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து வருகின்றது. 


 
 
ஜியோ சிம் வாங்க முடியவில்லை என்றாலும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (Mobile Number Portability) ஆப்ஷன் மூலம் ஜியோ சேவையை பெற முடியும். இந்த ஆப்ஷன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தும் நம்பர் கொண்டு மற்ற நெட்வர்க்களுக்கு மாறிக் கொள்ள முடியும். 
 
இந்தியா முழுக்க சுமார் 200,000 விற்பனை நிலையங்களில் ஜியோ சிம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ‘PORT' என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். 
 
பின்னர் ‘MyJio' செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆஃபர் கோடினை பெற வேண்டும். ஆஃபர் கோடு மற்றும் போர்ட் அவுட் கோடு போன்றவற்றை பெற்றவுடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி போன்ற விற்பனை நிலையங்களில், அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் புகைப்படம் போன்றவற்றை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ள முடியும். 
 
புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆக 7 நாட்கள் ஆகும் என்பதோடு ரூ.19 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.