Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோ-வின் காதலர் தின வாழ்த்து யாருக்கு தெரியுமா??


Sugapriya Prakash| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (11:06 IST)
வோடஃபோன், ஐடியா, ஏர்டெல் ஆகிய போட்டி நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

 
 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சேவை 4ஜி டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பில் வெளியானது. 
 
ஜியோவின் இந்த அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
 
இந்நிலையில் ஜியோ மீது கடுமையான கோபத்தில் இருக்கும் இந்நிறுவனங்களுக்கு ஜியோ நேற்று தனது காதலர் தின வாழ்த்துகளை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
ஜியோவின் இலவச 4ஜி சேவையால் ஏர்டெல் தன்னுடைய லாபத்தில் பாதியை இழந்துள்ளது. அதேபோல, வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தங்களது லாபத்தை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :