வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (14:23 IST)

ஜியோ ரிசார்ஜ் கட்டணங்கள் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

ரிலையன்ஸ் ஜியோ தனது ரிசார்ஜ் கட்டணங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ஜியோ கட்டண மாற்றங்களில் புதிய சில சேவைகளும் பழைய கட்டண முறைகளும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 19 ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண விலைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஜியோ பயனர்களுக்கு இரண்டு சலுகை திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தது. ரூ.309 திட்டத்தில் மாதம் 60 ஜிபி டேட்டாவும், ரூ.509 திட்டத்தில் 120 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டது. 
 
தற்போது இவை அனைத்திலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய திட்டங்களின் படி ஜியோ பயனர்கள் ரூ.309 ரீசார்ஜ் செய்யும் போது மாதம் 30 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி வீதம் வழங்கப்படுகிறது. 
 
ரூ.409 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. 
 
ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 60 ஜிபி டேட்டா, தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
ரூ.799 திட்டத்தில் வாடிக்கயாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இத்துடன் ரூ.999 திட்டத்தில் தினசரி எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி மாதம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
இந்த அனைத்து ரிசார்ஜ் கட்டண திட்டங்களுக்கும் வேலிட்டி ஒரு மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.