1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (07:45 IST)

சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மறுஆய்வு செய்யும்: அருண் ஜேட்லி

மத்திய அரசு, சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை மறுஆய்வு செய்யும் என்று மத்திய நித்யமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 
கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இந்த வட்டிக்குறைப்பை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வரவேற்றுள்ளார்.
 
இது குறித்து அவர் அருண் ஜேட்லி கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த முடிவு, நிதி செலவைக் குறைப்பதுடன், பொருளாதாரம் புத்துயிர் பெற உதவும்.
 
வட்டி குறைப்பு பலனை கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அது நம்பிக்கையை மட்டுமின்றி, முதலீட்டையும் ஊக்குவிக்கும். 
 
சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மறுஆய்வு செய்யும். பணவீக்க விகிதத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம்
 
ரிசர்வ் வங்கியின் முடிவு, பணவீக்கம் குறைந்திருப்பதுடன், கட்டுக்குள் இருப்பதையும் உணர்த்துகிறது.
 
எனவே, நிதி பற்றாக்குறை இலக்கை பூர்த்தி செய்ய அரசு முற்றிலும் உறுதி பூண்டுள்ளது" என்று  அருண் ஜேட்லி கூறினார்.