வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 28 டிசம்பர் 2016 (18:50 IST)

இணைய வேகத்துக்கு இந்தியா தள்ளுமுள்ளு: அதிர்ச்சி ரிப்போர்ட்

இணைய வேகத்தில் உலகளவில் இந்தியா 96வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற கேஷ்லெஸ் எகானமியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


 

 
இந்தியாவில் கேஷ்லெஸ் எகானமி, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை போன்றவற்றை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகளவில் இந்தியா இணைய வேகத்தில் மிகவும் பினதங்கி உள்ளது.
 
4ஜி தொழிநுட்பம் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், இந்தியா முழுவதும் செயல்படுவதில்லை. நேபால், வங்காள தேசம் போன்ற நாடுகளை விட இந்தியா இணைய வேகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியா இணைய வேகத்தில் 96வது இடத்தை பிடித்துள்ளது. 
 
இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் உலகின் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இணைய பாதுகாப்பு குறைவு காரணமாக ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளின் பின் நம்பர்களை திருடியது குறிப்பிடத்தக்கது. 
 
இணைய சேவை ஒரே அளவில் இன்னும் நாடு முழுவதும் சென்று சேரவில்லை. வங்கிகள் அனைத்தும் முழுமையாக இணையத்தால் இணைக்கப்பட்டு செயல்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து இந்தியாவை கேஷ்லெஸ் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று கூறிவருகிறது.
 
இது இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை கிராம மக்களுக்கும், ஏழை மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.
 
எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் எந்த ஒரு முன்னேற்பாடு இல்லாமல் கேஷ்லெஸ் எகனாமி நோக்கி செயல்பட்டு வருகிறது.