வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2016 (11:11 IST)

சீன பொருட்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்?? வர்த்தக ரீதியான பதில்!!

சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை சிலர் கையில் எடுத்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. 2011-2012 முதல் இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா 6 வது இடத்தில் உள்ளது.


 

 
கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன பொருட்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. விநாயகர் சிலை முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பொருட்கள் வரை அனைத்திற்கும் சீனாவின் வர்த்தகத்தை நம்பி இந்தியா உள்ளது.
 
இந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த, 490 பில்லியன் டாருக்கு இறக்குமதி செய்து வந்த சீன பொருட்கள் 380 பில்லியன் டாலர்களாகக் குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 2011-2012 ஆம் ஆண்டு 18 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் இப்போது 9 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. 
 
இந்தியாவில் இருந்து பருத்தி, காப்பர், பெட்ரோலியம் மற்றும் தொழிற்சாலை கருவிகளை மட்டுமே இந்தியா அதிகமா சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
 
ஆனால், மொபைல், லேப்டாப், சோலார் செல்கள், உரங்கள், விசை பலகைகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், இயர்போன்கள், இது மட்டும் இல்லாமல் காசநோய் மற்றும் தொழுநோய் மருந்துகள், ஆண்டிபையாடிக், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், போன்றவற்றையும் சீனா அதிகமாக இறக்குமதி செய்கிறது.
 
இந்தியா சீனா இடையேயான வர்த்தக முறை சீராக இல்லை, இந்நிலையில் சீன பொருட்களை பயன்படுத்துதல் பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.
 
உலகின் மிகப் பெறிய உற்பத்தி நாடாக சீனா மறியுள்ளது, இதன் மூலம் இந்தியா சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.