1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2016 (10:47 IST)

இணையதளத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் தொடக்கம்

2016-17 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் இணையதளம் மூலமாக தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது.


 

 
மத்திய வருமான வரி துறையின் இணையதளத்தில் மாத சம்பளம் பெறும் தனிநபர்கள், வட்டி வருமானம் பெறுகிறவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், வணிகத்தின் மூலம் வருமானம் பெறுகிற தனி நபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் கணினியில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் ஐ.டி.ஆர். 4 எஸ் (சுகம்) என்ற படிவத்தை பயன்படுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
 
பிற பிரிவினருக்கான படிவங்கள் விரைவில் வருமான வரி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
 
வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக வருமான வரித்துறை இணையதளத்தில் வரி கணக்கீட்டு கால்குலேட்டர் இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜூலை 31 ஆம் தேதி வரையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.