வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (16:15 IST)

ஹுண்டாய் கார்: ஆகஸ்ட் மேளா!!!

ஹுண்டாய் கார்: ஆகஸ்ட் மேளா!!!

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபர் ('Freedom Celebration Offer') என்ற பெயரில் மாபெரும் தள்ளுபடிளையும், சலுகைகளையும் அளிக்கிறது.


 


ஹூண்டாய் நிறுவனம், இந்த ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபரில், மொத்தம் 7 மாடல்கள் மீது சலுகைகளை அளித்துள்ளது.

இயான் ஹேட்ச்பேக்:

ஹூண்டாய் இயான் ஹேட்ச்பேக் ரூ.2.99 லட்சம் என்ற ஈர்க்கும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இயான் ஹேட்ச்பேக் மீது 50,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகடிகளும் அளிக்கப்படுகிறது.

ஐ10 ஹேட்ச்பேக்:

ஹூண்டாய் ஐ10 ஹேட்ச்பேக் மீது, அதிகப்படியாக 55,000 ரூபாய் ஆதாயம் கிடைக்கிறது.

கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக்:

ஹூண்டாய் கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் வேரியன்ட் மீது 85,000 ரூபாய் ஆதாயமும், இதன் டீசல் வேரியன்ட் மீது 93,500 ரூபாய் ஆதாயமும் கிடைக்கும்.

எலைட் ஐ20:

ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலின் டீசல் வேரியன்ட் 10,000 ரூபாய் ஆதாயத்துடன் விற்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்:

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் வேரியன்ட் மீது 47,000 ரூபாய் தள்ளுபடியும், டீசல் வேரியன்ட் மீது 57,000 ரூபாய் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

வெர்னா செடான்:

ஹூண்டாய் வெர்னா செடானின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் இரண்டின் மீதும் 80,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயம் உண்டு.

சான்ட்டா பீ:

பிரிமியம் எஸ்யூவியான ஹூண்டாய் சான்ட்டா பீ மாடல் மீது 1.50 லட்சம் ரூபாய்க்கான சலுகை கிடைக்கும்.

இதை தவிர்த்து கேஷ் பெனிஃபிட், அரசு ஊழியர்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம், இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்டண்டட் வாரண்டி போன்ற பல்வேறு சிறப்பான ஆதாயங்கள் கிடைக்கிறது.

இந்த சலுகைகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மட்டுமே. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஹூண்டாய் ஷோரூம்களிலும் இந்த சலுகைகள் கிடைக்கும்.