வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (14:17 IST)

ஏர்டெல் 5ஜிபி இலவச டேட்டா சலுகையை பெற வேண்டுமா??

ஏர்டெல் நிறுவனம் 5ஜிபி அளவிலான இலவச டேட்டா வழங்கும் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதனை பெற சில விதிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது.


 
 
யூஎம்டிஸ் மோட்: 
 
இந்த சலுகையை இன்டர்நெட் ப்ரவுசிங் யூஎம்டிஸ் மோட் கொண்டு (UMTS mode) பெறலாம். அதற்கு போனில் யூஎம்டிஎஸ் செட்டிங்ஸ் - கனெக்ஷன்ஸ் - மோர் நெட்வெர்க்ஸ் - மொபைல் நெட்வெர்க்ஸ் - பின்னர் நெட்வெர்க் மோட் தேர்வு செய்து 2ஜி, 3ஜி அல்லது 4ஜியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
முதலில் செய்ய வேண்டியவை:
 
1. மைஏர்டெல் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
 
2. டவுன்லோட் செய்த பின்பு ஏர்டெல் 10 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஓடிபி (OTP) சரிபார்க்கப்படும்.
 
3. பின்பு 5ஜிபி இலவச டேட்டா திட்டம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும். அதை கிளிக் செய்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
 
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
 
1. 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதுவும் மைஏர்டெல் ஆப் மூலம் தான் ரீசார்ஜ் செய்ய  வேண்டும். இதற்கு 1ஜிபி அளவிலான இலவச டேட்டா கிடைக்கும்.
 
2. பின்பு, விண்கே ம்யூஸிக் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் சுமார் 11 பாடல்களை ஒலிக்க வைத்தால் மேலும் 500எம்பி இலவச தரவு வழங்கப்படும்.
 
3. பின்னர், ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை மைஏர்டெல் ஆப் வேலெட்டில் பரிமாற்றம் செய்ய கூடுதலாக 500எம்பி இலவச தரவு வழங்கப்படும்.
 
4. பின்னர் வழங்கப்டும் சலுகையை லின்க் மூலம் விண்க் கேம் ஆப் ஏபிகே-வை பதிவிறக்கம் செய்து விருப்பமான ஆப்பை டவுன்லோட் செய்தால் இலவசமாக கூடுதல் 700 எம்பி தரவு கிடைக்கும்.
 
5. பின்பு, விண்க் மூவி ஆப் பதிவிறக்கம் செய்து ஜாஸ்பா மற்றும் பஜ்ரங்கி பைஜான் ஆகிய இரண்டு திரைபடங்களையும் பார்த்தால் 500 எம்பி + 500 எம்பி தரவு கிடைக்கும்.
 
6. பின்னர், ஏர்டெல் எண் கொண்ட நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 மாற்றம் செய்ய 500 எம்பி தரவு வழங்கப்படும்.
 
7. பின்பு, விண்க் ம்யூஸிக் ஆப்பிலிருந்து ஏதாவது ஒரு முழு ம்யூஸிக் ஆல்பத்தை பதிவிறக்கம் செய்ய 200 எம்பி கிடைக்கும்.
 
8. பின்னர், மைஏர்டெல் ஆப் மூலம் வேறொரு பயனருக்கு ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான பணத்தை அனுப்பினால் 500எம்பி அளவிலான தரவு வழங்கப்படும்.
 
4900 எம்பி: 
 
இந்த விதிமுறைகளை பின்பற்ற இலவசமாக சுமார் 4900 எம்பி டேட்டா கிடைக்கும்.
செப்டம்பர் 30க்கு முன்பு வரைதான் இச்சலுகை செல்லுபடியாகும். மேலும், இந்த சலுகை மூலம் கிடைக்கும் டேட்டாவை நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.