குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை: எவ்வளவு தெரியுமா?

Last Updated: சனி, 9 பிப்ரவரி 2019 (14:46 IST)
ஹுவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நிறுவனம் 8சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதர்கு முன்னர் வெளியான 7டி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த 8சி ஸ்மார்ட்போன் வெளியானது. 
 
இந்நிலையில், ஹானர் 8சி 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனோடு சில சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹானர் 8சி சிறப்பம்சங்கள்: 
# 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 506 GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 4 ஜிபி ராம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சிறப்பு சலுகைகள்:
1. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,450 மதிப்புள்ள பலன்கள் மற்றும் 100 ஜிபி 4ஜி டேட்டா
2. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5% உடனடி கேஷ்பேக்
3. மாத தவணையில் அமேசான் பே பயன்படுத்தும் போது 5% சலுகை
4. தேர்வு செய்யப்பட்ட வங்கி சார்பில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி


இதில் மேலும் படிக்கவும் :