Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூகுள் டியோ: புதிய வீடியோ அரட்டை செயலி

கூகுள் டியோ: புதிய வீடியோ அரட்டை செயலி


Sugapriya| Last Modified புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:04 IST)
கூகுள் நிறுவனம் தனது வீடியோ அரட்டை செயலியை(App) பிரத்தியேகமாக ஸ்மார்ட்போன்களுக்காக வெளியிட்டுள்ளது.

 


கூகுள் டியோ செயலி ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில்  செயல்படும். இந்த செயலியை பதிவு செய்யும் போது, பயன்பாட்டில் இருக்கும் சிம் மற்றும் தொலைப்பேசி எண்ணை சரிபார்க்கிறது.  பின்னர் ஒரு உறுதிப்படுத்தல் உரையை அனுப்புகிறது.

இந்த முழு அமைப்பு செயல்முறை நமது கணக்குகள் அல்லது நண்பர் பட்டியல்களை பராமரிக்க உதவுகிறது. இந்த செயலியில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நேரடியாக உங்கள் தொலைபேசி எண்ணுடன் தொடர்புடையதாகும்.

கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்”. இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.

இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும்  வீடியோ அரட்டையை சிக்கலற்றதாகவும் மாற்றி உள்ளது. 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :