1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:29 IST)

பெட்ரோல் வளங்களைத் தேட தொடர்ந்து முதலீடு செய்யப்பட வேண்டும்

வளைகுடா நாடுகள் எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட பெட்ரோலிய எண்ணெய் வளங்களில் உற்பத்திக் கிணறுகளை அமைக்கும் பணியிலும் தொடர்ந்து அதிக முதலீடுகளை செய்ய வேணடும் என்று பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடைய கூட்டமைப்பின் தலைவர் கோரியுள்ளார்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிக வேகமாக குறைந்துள்ள நிலையில், பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா அல் பதிரின் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
 
சர்வதேசசந்தையின் தேவையை ஈடுகட்டுவதையும் தாண்டி கூடுதலான அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து விட்டதாகக் கூறியுள்ள அவர், தற்போது செய்யப்படும் கூடுதல் முதலீடுகள், வருங்காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்று கூறியுள்ளார்.
 
கடந்த மாதம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவை குறைக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
 
வெள்ளிக்கிழமையன்று பிரென்ட் கச்சா எண்ணையின் விலை 62 டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்து விட்டது.
 
வட அமெரிக்காவில் ஷெல் பாறைகளில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் அதிக அளவில் எடுக்கப்படுவதாலும், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறித்த கவலைகளாலும் எண்ணெய் விலை குறைந்து வருகிறது.