வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.168 குறைந்தது


Suresh| Last Updated: வியாழன், 4 பிப்ரவரி 2016 (11:28 IST)
வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.168 குறைந்து, ரூ.1,175 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

 
மத்திய அரசு வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை நிரணயத்தைப் போலவே, இதன் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.
 
கேஸ் சிலிண்டரின் விலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தொடர்ந்து 6 மாதங்களாக  குறைந்து வந்த நிலையில், நவம்பர் மாதம் முதல் விலை அதிகரித்து வந்தது.
 
இந்நிலையில், இந்த விலை நடப்பு மாதம் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி சிலிண்டருக்கு ரூ.168 குறைந்து, ரூ.1,175 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :