Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூடுதல் டேட்டா, 100 மில்லியன் பயனர்கள்: ஜியோ அறிவிப்பின் முழு விவரங்கள்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 22 பிப்ரவரி 2017 (10:47 IST)
ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இலவச சேவை நீட்டிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

 
 
ரிலையன்ஸ் ஜியோ கடந்த 170 நாட்களில் 100 மில்லியன்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உள்ளது என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
 
இதை தவிர்த்து மேலும் பல சலுககைகளையும் அறிவித்தார். அவை,
 
# ஜியோ பிரைம் பயனர்களுக்கு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை இலவச டேட்டா.
 
# இந்த சலுகை பழைய பயனர்களுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் சேருபவர்களுக்கும் பொருந்தும்.
 
# பயனர்கள் ஜியோ மூலம் ஒவ்வொரு மாதமும் 100 கோடி GB-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நாளைக்கு 3.3 கோடி GB பயன்பாட்டுக்கும் அதிகமானது என குறிப்பிட்டார்.
 
# மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களைவிட ஜியோ 4G-க்கு அதிக பேஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
 
# கடந்த 170 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 7 வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது.
 
# தினமும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது.
 
# ஆதார் முறையில் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு மற்றும் மொபைல் எண் மொபிலிட்டி ஆகியவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
 
# ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஜியோ கட்டணம் அமலுக்கு வரும்.
 
# ஆனால், ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னரும் வாய்ஸ் கால் இலவச சேவை தொடரும்.
# கூடுதலாக 20 சதவீத டேட்டாவை ஜியோ வழங்கும்.
 
# ஜியோ உறுப்பினராவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.99 செலுத்த வேண்டும்.
 
# அதன் படி, இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.303 செலுத்தி, தினமும் 1GB என்ற வகையில் டேட்டா பெறலாம். 
 
# அதாவது, ஒரு GBக்கு ஒரு நாள் கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :