வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2017 (20:13 IST)

சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது எல்எப்எம்டி என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற லேண்ட்லைன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் இருக்க வேண்டும். பிராட்பேண்ட் இணைபில் ஸ்டேடிக் ஐபி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது.
 
இந்த சேவைப் பெற வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து அவர்களுக்கு தனியாக ஒரு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஸ்மார்ட்போனில் Zoiper என்ர ஆப் மூலம் குரல் வழி மற்றும் டேட்டா சேவையை பெறலாம்.
 
இந்த ஆப் மூலம் சிம்கார்டு இல்லாமல் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.