1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (19:32 IST)

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளும் அமேசான் நிறுவனர்!!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ள பில்கேட்ஸை அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னுக்கு தள்ளவுள்ளார் என போர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கடந்த 4 வருடங்களாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 90.1 பில்லியன் டாலர்.
 
இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பீஸோஸ் இன்னும் மூன்று வாரத்தில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி உலக கோடிஸ்வர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார் என போர்ப்ஸ் இதழ் கணித்துள்ளது.
 
இவரின், தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 88.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்னும் 2 பில்லியன் டாலர்கள் அதிகரித்தால் இவர் உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற்றுவிடுவார்.