வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2016 (10:44 IST)

'இண்டர்நெட் பேங்கிங்' கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில...

ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையின் போது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை.


 
 
ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு: 
 
ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்.
 
குறிப்பாக தேர்வு செய்யப்படும் பாஸ்வேர்டு பிறந்த நாள், திருமண நாள், போன்ற தேதிகள் நிச்சயம் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் பாஸ்வேர்ட் லோயர் மற்றும் அப்பர் எழுத்துகளிலும் எண்கள் மற்றும் ஒருசில சிம்பல்கள் கலந்து இருப்பதும் முக்கியம். 
 
வாய்மொழி உறுதிப்படுத்துதல்:
 
இமெயில் அல்லது வேறு வகையில் பணம் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வந்தாலோ அல்லது அக்கவுண்ட் குறித்த தகவல்களை ஆன்லைனில் கேட்டாலோ கண்டிப்பாகச் சம்பந்தப்பட்ட வங்கி மேனேஜரிடம் போன் செய்து வார்த்தைகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 
ஆட்டோமெட்டிக் பில் பேமண்ட்:
 
போன் பில் உள்பட ஒருசில பில்களைச் செலுத்த ஆட்டோமெட்டிக் ஆப்சனை செலக்ட் செய்திருப்போம். அதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. 
 
அதை செய்ய முடியாத நிலையில் ஆட்டோமெட்டிக் பில் பேமண்ட்க்கு ஒரு லிமிட்டை தேர்வு செய்து வைத்திருப்பது அவசியம். 
 
வைஃபை: 
 
முக்கியமான பரிவர்த்தனையில் ஈடுபடும்போது பப்ளிக் வைஃபையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான ஹேக்கர்கள் பப்ளிக் வைஃபை பயன்படுத்துவோர்களைத் குறி வைப்பார்கள். 
 
அதே போல் சொந்தமாக வைத்திருக்கும் வைஃபையைக் கண்டிப்பாகப் பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
ஃபைல்களை அனுப்புதல்: 
 
ஏதேனும், பைல்களை ஆன்லைனில் அல்லது இமெயிலில் அனுப்பும்போது கண்டிப்பாகப் பாஸ்வேர்டு பயன்படுத்திப் பைல்களை அனுப்ப வேண்டும். 
 
மேலும் அதற்குரிய பாஸ்வேர்டை அதே மெயிலில் தெரிவிக்காமல் வேறொரு மெயிலில் தனியாக அனுப்ப வேண்டும். 
 
ஒன் டைம் பாஸ்வேர்டு: 
 
தற்போது அனைத்து வங்கிகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ஒன் டைம் பாஸ்வேர்டு முறையைக் கொண்டு வந்துவிட்டது. 
 
மொபைலுக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்டை பதிவு செய்தால் தான் அடுத்த ஸ்டெப் போக முடியும். இந்த வசதி பணத்தைப் பாதுகாக்கும் இன்னொரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஸ்வேர்டு போட்டுப் பணத்தைப் பரிவர்த்தனை செய்வதை விட இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. 
 
ஆபரேட்டிங் சிஸ்டம் அப்டேட்: 
 
ஆபரேட்டிங் சிஸ்டத்தை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக முக்கியம். லேட்டஸ்ட் வெர்ஷனில் புதிய செக்யூரிட்டி அம்சங்கள், அப்டேட்டுக்கள், டிரைவர்கள் ஆகியவை மேலும் பாதுகாப்பை அதிகரிக்கக்கூடும்.