1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (11:53 IST)

கார் நிறுவனங்களின் ஆகஸ்ட் மாத அசத்தல் தள்ளுபடிகள்...........

கார் நிறுவனங்களின் ஆகஸ்ட் மாத அசத்தல் தள்ளுபடிகள்...........

இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான கார் நிறுவனங்கள் பல்வேறு அசத்தலான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அள்ளி தந்திருக்கிறது.


 


மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே:

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே, மாருதி நிறுவனம் வழங்கும் மாடல்களில் தொடர்ந்து நல்ல முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. வேகன்ஆர் ஸ்டிங்ரே மாடலின் அனைத்து வேரியன்ட்கள் மீதும் 70,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10:

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக், ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் மாடல்களில் மிகவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் சில வேரியன்ட்கள் மீது 45,000 ரூபாய் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ:

ஃபோக்ஸ்வேகனின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில், ஃபோக்ஸ்வேகன் போலோ 35,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா:

ஃபியட் அவென்ச்சுரா மாடல், புன்ட்டோ ரேஞ்ச்சில் ஃபியட் நிறுவனம் வழங்கும் கிராஸ்ஓவர் ஆகும். ஃபியட் நிறுவனம், அவென்ச்சுரா மாடல் மீது 65,000 வரையிலான தள்ளுபடிகளை அளிக்கிறது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்5:

ஜெர்மானிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பிஎம்டபுள்யூ, தங்களின் பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மாடல் மீது கிட்டத்தட்ட 5.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் வழங்குகின்றது.

ரெனோ டஸ்ட்டர் எம்டி:

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. ரெனோ நிறுவனம், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மீது 70,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை அளிக்கின்றனர்.

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200:

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200 மாடல் மீது, இன்சூரன்ஸுடன் சேர்த்து 4,00,000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த தள்ளுபடியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கோடா ரேபிட்:

இந்தியாவில், ஸ்கோடா ரேபிட் செடான், நல்ல திறன்மிக்க மிட்-சைஸ் செடானாக உள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், ஸ்டாக் கிளியர் செய்யும் நோக்கில், தற்போதைய ஸ்கோடா ரேபிட் மீது 1.10 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.

ஹோண்டா அமேஸ்:

ஹோண்டா நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட ஹோண்டா அமேஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர். ஆனால், இன்னுமும் கிளியர் செய்யப்படாத ஸ்டாக்குகள் கொஞ்சம் உள்ளது. இதை கிளியர் செய்யும் நோக்கில், 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கின்றனர்.

நிஸான் சன்னி:

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் வழங்கும் நிஸான் சன்னி, பின் இருக்கையில் உள்ள பயணியர்களுக்கு, சவுகரியமான லெக்ரூம் ஸ்பேஸ் கொண்டுள்ளது. நிஸான் சன்னி மீது 90,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் வென்ட்டோ பிரிமியம் செடான் மீது 75,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியினை சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அளிக்கிறது.

மாருதி சியாஸ்:

செடான் செக்மென்ட்டிலேயே மாருதி சியாஸ் தான் சிறந்த முறையில் விற்பனையாகும் செடானாக உள்ளது. மாருதி சியாஸ் செடானின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் மீது மாருதி நிறுவனம், 45,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி அளிக்கப்படுகிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்