புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (20:58 IST)

டபுள் மடங்கு விற்பனை: ஆப்பிள் அதிரடி வளர்ச்சி!

ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் மற்றும் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் வளர்ச்சி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
டிசம்பர் மாத காலாண்டு வரை சுமார் 51 லட்சம் மேக் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்தியா, லத்தின் அமெரிக்கா, துருக்கி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியா போன்ற சந்தைகளில் முந்தைய ஆண்டை விட 13% சாதனங்களின் விற்பனை அதிகமாக உள்ளதாம். 
 
சர்வதேச அளவில் சாதனங்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்து இருப்பது ஆப்பிள் வரலாற்றில் புதிய சாதனை என கூறப்படுகிறது. அதே போல் ஐபேட் விற்பனையும் இந்தியாவில் 8% வளர்ச்சி அடைந்துள்ளது.   
 
ஆப்பிள் வருவாய் அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக 8830 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியிருக்கிறதாம்.