Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம்

அமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம்


Sugapriya| Last Modified திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (12:02 IST)
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையைத் தொடங்கியுள்ளது.

 


முன்பதிவு செய்யும் பொருட்கள் மற்ற விமானங்கள் மூலம் மற்ற  நகரங்களுக்கு செல்லும். முதல் முறையாக தன்னுடைய பெயரில் கார்கோ விமானத்தை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் வரவேற்பை பார்த்த பின்னர் அடுத்த சில வருடங்களில் இந்த சேவையை 40 கார்கோ விமானங்களாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனியாக கார்கோ விமானம் இருந்தாலும் பொருட்களை அனுப்புவதற்கு பெட்எக்ஸ், யூபிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பயன்படுத்தப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

எனினும், தனது விமானத்தில் அடுத்த நிறுவனங்களின் பொருட்களை ஏற்றிச்செல்லுமா என்பது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :