ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:28 IST)

ஏர்டெல் அடுத்த இலக்கு: பேமண்ட் வங்கிச் சேவை!!

இந்தியாவின் முதல் பேமண்ட் வங்கிச் சேவையை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது.


 
 
கடந்த அக்டோபர் மாதம் ஏர்டெல் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் பேமண்ட் வங்கி சேவையை தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
 
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வாலட் மற்றும் ஏர்டெல்​ மணி (Airtel Money) சேவைகளை வழங்கிவருகிறது. இதனை தொடர்ந்து, தற்போது பேமண்ட் வங்கிச்​ சேவையிலும் ஏர்டெல் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
 
இதன் மூலம், இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்களில் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்த ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும்.
 
இவற்றின் மூலம் அடிப்படை மற்றும் எளிமையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 
 
மேலும் 10.50 லட்சம் ஏர்டெல் ஸ்டோர்களில் ஏர்டெல் பேமண்ட் வங்கி சேவையை விரிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஏர்டெல் மொபைல் எண்ணையே வங்கி கணக்காக பயன்படுத்துவது இந்த சேவையின் தனி சிறப்பம்சம். டிஜிடெல் முறையில் இந்த சேவை செயல்படும். 
 
ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும். சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.