ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (16:35 IST)

கூகுள் இல்லான பிழைக்க முடியாதா? அதிரடி முடிவெடுத்த ஹூவாய்!!

கூகுள் சேவையை இனி ஹூவாய் ஸ்மார்ட்போன் நிறுவனம் பயன்படுத்த முடியாத நிலையில் புதிய இயங்குதளத்தை உருவாக்க உள்ளதாம். 
 
கூகுள் நிறுவனம் ஹூவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடனான வியாபார உறவுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்து விட்டது. இதனால், கூகுள் சேவைகள் மற்றும் பிளே ஸ்டோர் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் ஹுவாய் உள்ளது. 
 
இதனால், ஹூவாய் நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம். தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஹூவாயின் புதிய இயங்குதளம் ஓக் ஒ.எஸ். (Oak OS) என அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 
ஹூவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் உரிமை, பிளே ஸ்டோர் மற்றும் இதர சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்டு மாத இறுதியில் நிறைவடைகிறது. எனவே ஹூவாயின் ஓக் ஒ.எஸ். எனும் புதிய இயங்குதளம் இது வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.