Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் முதல் பிஎஃப் பென்ஷன் கிடையாது?


Sugapriya Prakash| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (10:28 IST)
ஆதார் எண், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஆகியவற்றை பிஎப் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் பிஎஃப் ஓய்வூதியம் இனி அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் படி பிஎஃப் திட்டத்தில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் உறுப்பினர்கள் மத்திய அரசின் மானியம் பெற தகுதி உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.
 
இதில் ஓய்வூதியம் பெறுவதற்காக ஆதார் எண் கட்டாயம் என  ஜனவரி 4 அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் படி அரசாங்க மானியம் தொடர்ந்து பெற ஆதார், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை அளிப்பது கட்டாயமாகும்.
 
மேகும், ஆதாரங்களை அளிப்பவர்களுக்கு மட்டும் அரசின் மானியங்களைப் பெற முடியும் எனவும், ஓய்வூதியம் சார்ந்த வங்கி பரிவர்த்தனை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆதாரங்களை இம்மாதம் 28ம் தேதிக்குள் அளிக்கவில்லை என்றால் மார்ச் 1ம் தேதிக்கு பின் ஓய்வூதிய தொகை செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :