1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:47 IST)

தொழிற்கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஐந்து காரணிகள்

ஒரு தொழிலை நடத்துவதற்குத் தீவிர மிக முக்கியமான தேவை பணம். இந்தத் தொகையை சேமிப்பிலிருந்தோ அல்லது ஒரு தொழிற்கடன் மூலமோ பெறலாம்.

 
தொழிற்கடனுக்கான விண்ணப்பங்கள் வங்கிகளால் பின்வரும் காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
 
1. மோசமான கடன் பதிவுகள் (க்ரெடிட் ஹிஸ்டரி):
 
ஒருவருடைய க்ரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறுவதற்கான குறியீட்டு மதிப்பெண் கடன் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கிறது. 
 
இது வாங்கும் கடனை திரும்ப அடிப்பதில் எவ்வளவு திறன் உள்ளவர் என்பதைக் குறிக்கிறது. வங்கிகள் கடன் வழங்க முந்தைய தொழில் கடன் மற்றும் தனிப்பட்ட கடன்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்யும். 
 
தொழிற்கடன் தொடர்பான விவரங்கள் சரியாக இருந்தாலும், க்ரெடிட் கார்டு நிலுவைகளையோ அல்லது மாதாந்திர தவணைகளையோ காட்டாமை அல்லது காலம் தாழ்த்திக் கட்டியிருந்தால் அது புதிய கடன் பரிசீலனையை பாதிக்கும். 
 
2.  பணப்புழக்கம் (கேஷ் புளோ): 
 
ஒரு தொழிலில் தினசரி வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவும், சேவைகளை பெறவும் தேவையான அளவு பணத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம். 
 
தொழிற்கடன் தவணைகளை திரும்பச் செலுத்தவும் அவசர தேவைகளுக்காகவும் பணம் வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. 
 
பலவீனமான பணப்புழக்க தொழிலானது சிரமப்படுவதையே குறிக்கும். எனவே பணப்புழக்கம் ஒரு தொழிற் கடனுக்கான விண்ணப்ப நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
3. கடன் ஈட்டுறுதியின்மை (கோலாட்டரல்):
 
ஈட்டுறுதி என்பது கடன் தருபவரும் உத்தரவாதமாக அளிக்கும் ஒரு சொத்து. ஒருவேளை கடனை திரும்பச் செலுத்த இயலாமல் போனால், வாங்கி அந்தச் சொத்தை விற்று விடும். 
 
எனவே ஈட்டுறுதியானது கடன் தொகைக்கு இணையாகவோ அல்லது அதிக மதிப்புள்ளதாகவோ இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தொழிற்கடங்களுக்கு இந்த ஈட்டுறுதியை வலியுறுத்துகின்றன. 
 
4. ஆவணங்கள் சரியின்மை: 
 
கடனுக்கு விண்ணப்பம் செய்யும் முன் அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் சரியாக சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். 
 
தவறான அல்லது குறைபாடுகளுடன் கூடிய ஆவணங்களைத் தருவது கடன் விண்ணப்ப நிராகரிப்பிற்கான பொதுவாக காரணமாக உள்ளது. 
 
தொழிலுக்கான விவரமான திட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும். நிதிநிலை அறிக்கைகளையும், வங்கிக் கணக்கு விவர அறிக்கையையும் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களையும் தரவேண்டும். 
 
5. அரசியல், பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் (PEST):
 
இவை கட்டுப்படுத்த இயலாத வெளிச்சூழலில் நிலவும் காரணிகள். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொழிலை பாத்திக்க கூடும். 
 
உயர்ந்துவரும் பணவீக்கம், அயல்நாட்டு முதலீட்டு மற்றும் வரிக் கொள்கைகளில் மாற்றம் வருடாந்திர மிதித்த திட்டங்கள் ஆகியவை கடன் தருவதை பாதிக்கக் கூடியவை ஆகும்.